ADDED : மே 10, 2024 04:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி : கடந்த நிதியாண்டின் நான்காவது காலாண்டில் எஸ்.பி.ஐ., நிகர லாபம், 24 சதவீதம் அதிகரித்து 20,698 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
அதிக வட்டி வருமானம் மற்றும் குறைந்த ஒதுக்கீட்டின் காரணமாக, வங்கியின் நிகர லாபம் அதிகரித்துள்ளது. முந்தைய 2022 - 23 நிதியாண்டின் மார்ச் காலாண்டில், நிகர லாபம் 16,695 கோடி ரூபாயாக இருந்தது. வங்கியின் வரிக்கு பிந்தைய லாபம் 10,432 கோடி முதல் 14,743 கோடி ரூபாய் வரை இருக்கும் என்ற மதிப்பீடுகளை இந்த முடிவுகள் முறியடித்துள்ளன.
இதையடுத்து நேற்று இவ்வங்கியின் பங்குகள் விலை தேசிய பங்குச் சந்தையில், 1.13 சதவீதம் உயர்ந்து, 820 ரூபாயாக அதிகரித்தது.