ADDED : செப் 10, 2024 11:21 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி:'சியாம்' எனும் இந்திய வாகன தயாரிப்பாளர்கள் சங்கத்தின் புதிய தலைவராக 'டாடா மோட்டார்ஸ்' நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஷைலேஷ் சந்திரா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
நேற்று நடைபெற்ற சங்கத்தின் செயற்குழுக் கூட்டத்தில், இதுகுறித்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர், இதற்கு முன்பாக ஏற்கனவே இச்சங்கத்தின் துணைத்தலைவராக பணியாற்றியுள்ளார். தற்போது, 'வால்வோ ஐச்சர் கமர்ஷியல் வெகிக்கிள்ஸ்' நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி வினோத் அகர்வால் சங்கத்தின் தலைவராக செயல்பட்டு வருகிறார்.