ADDED : ஏப் 25, 2024 10:48 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி:ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனமான ஸ்விக்கி, ஐ.பி.ஓ., எனும் புதிய பங்கு வெளியீட்டின் வாயிலாக 10,414 கோடி ரூபாய் நிதி திரட்ட, அதன் பங்குதாரர்கள் ஒப்புதல் வழங்கி உள்ளனர். இந்த பங்கு வெளியீட்டின் வாயிலாக 3,750 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய பங்குகளும்; 6,664 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குதாரர்களின் பங்குகளும் வெளியிடப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2014ம் ஆண்டு துவங்கப்பட்ட ஸ்விக்கி நிறுவனத்தில், தற்போது 4,700 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். கடந்தாண்டு மார்ச் நிலவரப்படி, நிறுவனத்தின் ஆண்டு வருவாய் கிட்டத்தட்ட 9,000 கோடி ரூபாயாக இருந்தது. நடப்பு ஏப்ரல் 10 நிலவரப்படி நிறுவனத்தின் மதிப்பு 1.05 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது.

