ADDED : பிப் 14, 2025 11:42 PM

புதுடில்லி:'சோனாலிகா' என்ற பெயரில் டிராக்டர்களை தயாரித்து விற்பனை செய்யும் நிறுவனமான இன்டர்நேஷனல் டிராக்டர்ஸ், ஜனவரியில் 10,350 'சோனாலிகா' டிராக்டர்களை விற்பனை செய்துள்ளது.
கடந்தாண்டு ஜனவரியில், ஒட்டுமொத்தமாக 9,769 டிராக்டர்கள் விற்பனை செய்த நிலையில், தற்போது புதிய மைல்கல்லை எட்டியுள்ளதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து நிறுவனத்தின் இணை மேலாண் இயக்குநர் ராமன் மிட்டல் கூறுகையில், ''2025ம் ஆண்டு பயணத்தை முன்னெப்போதும் இல்லாத வகையில், 10,350 டிராக்டர்கள் மொத்த விற்பனை எண்ணிக்கையுடன் துவங்கி உள்ளோம். நாட்டின் தெற்கு, மேற்கு மற்றும் மத்திய பகுதிகளில், கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவு, அணைகளில் அதிக நீர் இருப்பு உள்ளது.
இதனால், 'ராபி' பருவ சாகுபடி பரப்பு உயர வாய்ப்புள்ள நிலையில், வரும் மாதங்களில் டிராக்டர் விற்பனைஅதிகரிக்குமென நம்பிக்கை உள்ளது,'' என்றார்.