sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

ஈரானில் பலி எண்ணிக்கை 1,000ஆக அதிகரிப்பு; அதிபர் டிரம்பின் போருக்கு அமெரிக்க பார்லி ஆதரவு

/

ஈரானில் பலி எண்ணிக்கை 1,000ஆக அதிகரிப்பு; அதிபர் டிரம்பின் போருக்கு அமெரிக்க பார்லி ஆதரவு

ஈரானில் பலி எண்ணிக்கை 1,000ஆக அதிகரிப்பு; அதிபர் டிரம்பின் போருக்கு அமெரிக்க பார்லி ஆதரவு

ஈரானில் பலி எண்ணிக்கை 1,000ஆக அதிகரிப்பு; அதிபர் டிரம்பின் போருக்கு அமெரிக்க பார்லி ஆதரவு

6


ADDED : மார் 05, 2026 07:20 AM

Google News

6

ADDED : மார் 05, 2026 07:20 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாஷிங்டன்: ஈரான் மீது அமெரிக்கா நடத்தி வரும் போர் தொடர்பாக அமெரிக்க பார்லியில் நடத்தப்பட்ட ஓட்டெடுப்பில் செனட் உறுப்பினர்கள், அதிபர் டிரம்பின் முடிவுக்கு ஆதரவாக ஓட்டளித்துள்ளனர். இதனிடையே, இந்தப் போரில் இதுவரையில் 1000 பேர் கொல்லப்பட்டுள்ளதாக ஈரான் அறிவித்துள்ளது.

அணு ஆயுத ஒப்பந்த விவகாரத்தில் ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் இணைந்து கடந்த 28ம் தேதி முதல் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில், ஈரான் ஆட்சியாளர் கமேனி உள்பட பல்வேறு முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து, வளைகுடா நாடுகளில் அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஈரான் தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருகிறது. இதனால், மேற்காசியாவில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

இதனிடையே, ஈரான் மீது திடீரென போர் துவங்கிய அதிபர் டிரம்பின் முடிவுக்கு அமெரிக்காவின் செனட் சபையின் உறுப்பினர்கள் அதிருப்தி தெரிவித்தனர். மேலும், இது தொடர்பாக 2 நாட்களாக ரகசிய பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து, போருக்கு எதிராக அமெரிக்க செனட் சபையில் நேற்று ஓட்டெடுப்பு நடத்தப்பட்டது. இதில், போர் அதிகாரத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டால், இனி வரும் தாக்குதல்களுககு பார்லியில் ஒப்புதல் பெற வேண்டும் என்பது கட்டாயமாக்கப்படும். இப்படிபட்ட சூழலில், பெரும்பான்மையான செனட் சபை உறுப்பினர், அமெரிக்க அதிபர் டிரம்புக்கு ஆதரவாக ஓட்டளித்தனர்.

போர் துவங்கி 6 நாட்களை எட்டிய நிலையில், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதலில் இதுவரையில் 1,000 பேர் உயிரிழந்ததாக ஈரான் தெரிவித்துள்ளது. பேச்சுவார்த்தை மூலம் போரை தவிர்க்கவே ஈரான் விரும்பியதாகவும், ஆனால், அமெரிக்கா - இஸ்ரேல் ராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டதால், தற்காப்பு நடவடிக்கையை எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாக ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us