sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மார்ச் 05, 2026 ,மாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

லெபனானில் தரைவழி தாக்குதலை தவிர்க்க வேண்டும்: இஸ்ரேலுக்கு பிரான்ஸ் அதிபர் அறிவுரை

/

லெபனானில் தரைவழி தாக்குதலை தவிர்க்க வேண்டும்: இஸ்ரேலுக்கு பிரான்ஸ் அதிபர் அறிவுரை

லெபனானில் தரைவழி தாக்குதலை தவிர்க்க வேண்டும்: இஸ்ரேலுக்கு பிரான்ஸ் அதிபர் அறிவுரை

லெபனானில் தரைவழி தாக்குதலை தவிர்க்க வேண்டும்: இஸ்ரேலுக்கு பிரான்ஸ் அதிபர் அறிவுரை

2


ADDED : மார் 05, 2026 06:55 AM

Google News

2

ADDED : மார் 05, 2026 06:55 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நமது நிருபர்

லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தவிர்க்க இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை வலியுறுத்தியதாக பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் தெரிவித்தார்.



இது குறித்து இமானுவேல் மேக்ரான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: லெபனானில் உள்ள நிலைமை குறித்து விவாதிக்க இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, லெபனான் ஜனாதிபதி ஜோசப் அவுன் மற்றும் பிரதமர் நவாப் சலாம் ஆகியோருடன் நான் பேசினேன். லெபனானில் தாக்குதல் சம்பவங்கள் மிகவும் கவலையளிக்கிறது.

இஸ்ரேல் தாக்குதல்களை உடனடியாக நிறுத்த வேண்டியதன் அவசியத்தை நான் மீண்டும் வலியுறுத்தினேன். தாக்குதலை தீவிரப்படுத்தினால் முழு பிராந்தியத்தையும் ஆபத்தில் ஆழ்த்தும். லெபனானின் பிராந்திய ஒருமைப்பாட்டைப் பாதுகாக்கவும், தரைவழித் தாக்குதலைத் தவிர்க்கவும் இஸ்ரேல் பிரதமரை நான் வலியுறுத்தினேன். போர் நிறுத்த ஒப்பந்தத்தை மேற்கொள்வது முக்கியம்.

லெபனான் ஆயுதப் படைகள் தங்கள் இறையாண்மைப் பணிகளை முழுமையாக நிறைவேற்றவும், ஹிஸ்புல்லா பயங்கரவாதிகளின் அச்சுறுத்தலுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் பிரான்ஸ் தனது நட்பு நாடுகளுடன் இணைந்து முயற்சிகளை ஆதரிக்கும். தெற்கு லெபனானில் மனிதாபிமான அவசரநிலைக்கு பதிலளிக்கும் விதமாக, இடம்பெயர்ந்த லெபனான் மக்களை ஆதரிக்க பிரான்ஸ் உடனடி நடவடிக்கை எடுக்கும். இவ்வாறு இமானுவேல் மேக்ரான் கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us