ADDED : மார் 08, 2025 12:05 AM

மீண்டும் ஊசலாட்டம்
வாரத்தின் கடைசி வர்த்தக நாளான நேற்று, நிப்டி லேசான உயர்வுடனும்; சென்செக்ஸ் சிறிய இறக்கத்துடனும் நிறைவு செய்தன. தொடர்ச்சியாக அன்னிய முதலீடுகள் வெளியேற்றத்துக்கு இடையே, நேற்று வர்த்தகம் ஆரம்பித்தபோது, இந்திய சந்தை குறியீடுகள் இறக்கத்துடன் துவங்கின. வர்த்தக போர் குறித்த பயம் நீடிப்பதால், முதலீட்டாளர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் சந்தையை அணுகினர். இதனால், வர்த்தக நேரத்தின்போது ஊசலாட்டம் நீடித்தது. வர்த்தக நேர முடிவில், சந்தை குறியீடுகள் சிறிய மாற்றத்துடன் நிறைவடைந்தன. தொடர்ச்சியாக, கடந்த இரண்டு நாட்கள் கண்ட உயர்வுக்கு சென்செக்ஸ் முற்றுப்புள்ளி வைத்தது. எனினும், வாராந்திர அடிப்படையில், சந்தை குறியீடுகள் உயர்வுடன் முடிவடைந்தன.
அன்னிய முதலீடு
அன்னிய முதலீட்டாளர்கள் 2,035 கோடி ரூபாய்க்கு பங்குகளை நேற்று விற்று இருந்தனர்.
கச்சா எண்ணெய்
உலகளவிலான கச்சா எண்ணெய் விலை நேற்று 1 பேரலுக்கு 1.32 சதவீதம் உயர்ந்து, 70.38
அமெரிக்க டாலராக இருந்தது.
ரூபாய் மதிப்பு
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 17 பைசா அதிகரித்து, 86.95 ரூபாயாக
இருந்தது.