இன்ஜின் தயாரிப்பதற்காக 'டாபே - டியூட்ஸ்' ஒப்பந்தம்
இன்ஜின் தயாரிப்பதற்காக 'டாபே - டியூட்ஸ்' ஒப்பந்தம்
ADDED : ஜூலை 03, 2024 11:05 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி:இந்தியாவில் டிராக்டர் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் 'டாபே டிராக்டர்ஸ் அண்டு மோட்டார்ஸ்' நிறுவனம், இன்ஜின் தயாரிப்பதற்காக, ஜெர்மனியைச் சேர்ந்த டியூட்ஸ் ஏ.ஜி., நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் கீழ், டியூட்ஸ் நிறுவனத்தின் இன்ஜின்களை, டாபே மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவில் தயாரித்து வழங்க உள்ளது. கிட்டத்தட்ட 30,000 இன்ஜின்களை டியூட்ஸ் நிறுவனத்துக்கு தயாரித்து வழங்க உள்ளது.
டியூட்ஸ் நிறுவனத்தின் வெளிநாட்டு சந்தை தேவைகளுக்கு ஏற்ப தயாரிப்பதுடன், இந்திய சந்தை தேவைகளுக்கு ஏற்பவும் தயாரிக்கப்பட உள்ளது. இந்த இன்ஜின்கள், நிறுவனத்தின் ராஜஸ்தான் ஆலையில் தயாரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.