ADDED : மார் 12, 2025 01:33 AM

சென்னை:வணிக செயல்பாடுகளை எளிமைப்படுத்தவும்; திறன்களை மேம்படுத்தவும், தொழில் முனைவோர்களுக்கு ஒரு நாள் பயிற்சி வழங்கப்படவுள்ளது.
இது குறித்து, தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பு:
தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் வாயிலாக, தொழில் முனைவோருக்கு, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமான சாட் ஜி.பி.டி., பயிற்சி 15ம் தேதி நடக்கவுள்ளது. தொழில் முனைவோர்கள் சிறு மற்றும் நடுத்தர வணிக உரிமையாளர்கள் மற்றும் புத்தாக்க நிறுவனர்களுக்கு சாட் ஜி.பி.டி.,யை பயன்படுத்தி வணிக செயல்பாடுகளை எளிமைப்படுத்தவும், திறன்களை மேம்படுத்தவும், செலவுகளை குறைக்கவும், உதவும் தகவல்கள் மற்றும் நடைமுறைகள் குறித்து பயிற்சி வழங்கப்படும். இது குறித்த கூடுதல் விபரங்களை www.ediitn.in என்ற வலைதளத்தில் தெரிந்து கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு, அலுவலக நாட்களில் காலை 10:00 மணி முதல் மாலை 5:45 மணி வரை 90806 09808, 96771 52265, 98416 93060 என்ற மொபைல் போன் எண்கள் வாயிலாக தொடர்பு கொண்டு பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.