கரூரில் காற்றாலை மின் நிலையம் 'டாடா பவர்' அமைக்கிறது
கரூரில் காற்றாலை மின் நிலையம் 'டாடா பவர்' அமைக்கிறது
UPDATED : ஆக 04, 2024 10:31 AM
ADDED : ஆக 04, 2024 01:59 AM

சென்னை:'டாடா பவர் ரினீயுவபிள்' நிறுவனம், கரூர் மாவட்டத்தில் 198 மெகா வாட் திறனில் காற்றாலை மின் நிலையம் அமைக்கும் பணியை துவக்கியுள்ளது.
மத்திய அரசு, சுற்றுச்சூழலை பாதிக்காத சூரியசக்தி, காற்றாலையை உள்ளடக்கிய புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தியை ஊக்குவித்து வருகிறது. தமிழகத்தில் இத்தகைய மின் உற்பத்தி நிலையங்களை அமைக்க சாதகமான சூழல் நிலவுகிறது.
இதையடுத்து, டாடா குழுமத்தைச் சேர்ந்த டாடா பவர் நிறுவனம், கரூர் மாவட்டத்தில் 198 மெகா வாட் திறனில் காற்றாலை மின் நிலையம் அமைப்பதற்கான பணிகளை துவக்கியுள்ளது.
இது தவிர, இந்நிறுவனம் துாத்துக்குடி மாவட்டம், கயத்தாறில், 100 மெகா வாட் திறனில் சூரியசக்தி மின் நிலையத்தை அமைக்க உள்ளது; இதற்கான பணிகளையும் விரைவில் துவக்க திட்டமிட்டுள்ளது.
ஒரு மெகா வாட் திறனில் காற்றாலை, சூரியசக்தி மின் நிலையம் அமைக்க தலா 5 ஏக்கர் நிலம் தேவை. ஒரு மெகா வாட் திறனில் சூரியசக்தி மின் நிலையம் அமைக்க, 4.50 கோடி ரூபாயும்; காற்றாலைக்கு 7 கோடி ரூபாயும் முதலீடாக தேவைப்படுகிறது.