ADDED : ஆக 29, 2024 12:53 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மின்வாகன பேட்டரி செயல்திறன் குறைபாட்டால், 'ஆக்டிலியன் பவர் சிஸ்டம்ஸ்' என்ற சீன நிறுவனத்திடம் இருந்து பேட்டரி கொள்முதல் செய்ய 'டாடா மோட்டார்ஸ்' நிறுவனம் கைகோர்த்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மின்சார கார் பேட்டரிகளுக்காக, இந்நிறுவனம் சீனாவை நாடியுள்ளது இதுவே முதல் முறையாகும்.
பொதுவாக, டாடா மின்சார கார்களுக்கான பேட்டரி, அக்குழுமத்தின் 'டாடா ஆட்டோ காம்ப் சிஸ்டம்ஸ்' நிறுவனத்தால் தயாரிக்கப்படும். ஆனால், தற்போது, அறிமுகப்படுத்தப்பட்டுள்ள டாடா கர்வ் எஸ்.யூ.வி., கூபே காரில், ஆக்டிலியன் நிறுவனத்தின் பேட்டரி பேக் பயன்படுத்தப்பட்டுள்ளது.