டெஸ்லாவின் முதல் ஷோரூம் மும்பையில் திறக்க ஒப்பந்தம்
டெஸ்லாவின் முதல் ஷோரூம் மும்பையில் திறக்க ஒப்பந்தம்
ADDED : மார் 03, 2025 07:03 AM

மும்பை : டெஸ்லாவின் முதல் இந்திய ஷோரூமை மும்பையின் பி.கே.சி.,யில் திறக்க ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்து உள்ளது.
இந்திய கார் சந்தையில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட, அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்கின் மின்சார கார் நிறுவனமான டெஸ்லா, இந்தியாவில் தன் முதல் ஷோரூமை மும்பையின் பி.கே.சி., எனப்படும் பாந்த்ரா குர்லா பகுதியில் திறக்க ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
மேலும் 4,000 சதுர அடி கொண்ட இடத்திற்கு, 35 லட்சம் ரூபாய் மாத வாடகையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதைத் தொடந்து, டில்லியின் ஏரோசிட்டியில் இதன் இரண்டாவது ஷோரூமை திறக்கவும் டெஸ்லா திட்டமிட்டுஉள்ளது.
பிரதமர் மோடியின் சமீபத்திய அமெரிக்க பயணத்தின் போது, எலான் மஸ்க்குடன் நடத்திய சந்திப்புக்கு பிறகு, டெஸ்லாவின் இந்திய வருகை வேகமெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.