ADDED : செப் 01, 2024 12:56 AM

கோல்கட்டா,:'ஹீலியோஸ் லைப்ஸ்டைல்' நிறுவனத்தின் மீதமுள்ள 49.60 சதவீத பங்குகளை கையகப்படுத்தி இருப்பதாக, 'இமாமி' நிறுவனம் அறிவித்துள்ளது.
கோல்கட்டாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் நுகர் பொருட்கள் நிறுவனமான இமாமி, ஏற்கனவே ஹீலியோஸ் லைப்ஸ்டைல் நிறுவனத்தின், 50.40 சதவீதம் பங்குகளை வாங்கி இருந்தது.
இந்நிலையில், 49.60 சதவீதம் பங்குகளை, கிட்டத்தட்ட 178 கோடி ரூபாய்க்கு வாங்கி உள்ள இமாமி நிறுவனம், மூன்று மாதங்களில் கையகப்படுத்துதல் நடவடிக்கைகளை முடிக்க திட்டமிட்டு உள்ளது.
ஹீலியோஸ் லைப்ஸ்டைல், 'தி மேன் கம்பெனி' என்ற பெயரில் ஆன்லைன் தளத்தில், ஆண்களுக்கான சிகை அலங்கார பொருட்கள், அழகு சாதன பொருட்கள் மற்றும் வாசனை திரவியங்கள் உள்ளிட்டவற்றை விற்பனை செய்து வருகிறது.
2023- - 24ம் நிதியாண்டில், இந்நிறுவனம் 183 கோடி ரூபாயை விற்றுமுதலாக ஈட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.