ADDED : பிப் 25, 2025 10:52 PM

1.44 கோடி
கடந்த 2024ம் ஆண்டில், இந்தியாவின் பெர்சனல் கம்ப்யூட்டர்கள் விற்பனை 3.80 சதவீதம் அதிகரித்து 1.44 கோடியாக இருந்ததாக சந்தை ஆராய்ச்சி நிறுவனமான ஐ.டி.சி., தெரிவித்துள்ளது. இந்த விற்பனையில் 30 சதவீத பங்களிப்புடன் எச்.பி., நிறுவனம் முன்னிலையில் உள்ளது.
23 கோடி
டாடா சன்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமும், வங்கி சாரா நிதி நிறுவனமுமான டாடா கேபிட்டல், 1,504 கோடி ரூபாய் மதிப்பிலான 23 கோடி பங்குகளை, புதிய பங்கு வெளியீட்டின் வாயிலாக விற்று, நிதி திரட்ட அதன் நிர்வாகக்குழு ஒப்புதல் அளித்துள்ளது.
ரூ.1,00,000 கோடி
இந்தியாவின் பிரபல தொழிலதிபர்களான முகேஷ் அம்பானி, கவுதம் அதானி இருவரும் தலா 50,000 கோடி ரூபாயை, அசாம் மாநிலத்தில் அடுத்த ஐந்தாண்டுகளில் தொழில் முதலீடு செய்ய உள்ளனர். இதற்கான அறிவிப்பை அசாமில் நடந்த 'முதலீடு மற்றும் உள்கட்டமைப்புக்கான உச்சி மாநாடு 2025'ல் வெளியிட்டனர்.

