ADDED : மார் 28, 2024 11:08 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி:'டொயோட்டா' நிறுவனம், அதன் குறிப்பிட்ட சில வாகனங்களின் விலையை, ஏப்ரல் 1ம் தேதி முதல் உயர்த்த திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது.
அதிகரிக்கும் உள்ளீடு மற்றும் நடைமுறை மூலதன செலவுகள் காரணமாக, குறிப்பிட்ட சில வாகனங்களின் விலையை, ஒரு சதவீதம் வரை உயர்த்த திட்டமிட்டுள்ளதாக, 'டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார்' நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த விலை ஏற்றம், வரும் ஏப்ரல் முதல் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

