ADDED : மார் 05, 2025 11:41 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இணையதளம் உருவானபோது அச்சமிருந்தது. எல்லா சேவைகளையும் அதில் பெற்றால் வேலைவாய்ப்பு இருக்காதே என்றனர். ஆனால், அப்படி நடக்கவில்லை. தற்போது வாழ்வோடு இணையதள சேவை கலந்திருந்தாலும், வேலைவாய்ப்பை அது பறிக்கவில்லை.
அதுபோலவே, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமும். சமூக வலைதளங்களைப் போல, அதுவும் வரும் காலத்தில் நம் தொழில்நுட்ப முன்னேற்றத்தில் ஓர் அங்கமாகி விடும். இந்தியா தனது சொந்த ஏ.ஐ., மாடலை நிச்சயம் உருவாக்க முடியும். அப்போது, சந்தையில் வலிமையான சவாலாக அது திகழும்.