
புதுடில்லி:தங்கத்தின் விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டிய போதிலும், கடந்த ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலகட்டத்தில், இந்தியாவில் தங்கத்தின் தேவை 8 சதவீதம் அதிகரித்து, 136.60 டன்னாக உயர்ந்திருந்ததாக, உலக தங்க கவுன்சில் தெரிவித்துள்ளது.
கவுன்சில் அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
தங்கத்தின் விலை அதிகரித்த போதிலும், கடந்த ஜனவரி முதல் மார்ச் வரையிலான முதல் காலாண்டில், இந்தியாவில் தங்கத்தின் தேவை, ஆபரண தங்கம் மற்றும் முதலீடு ஆகிய இரண்டையும் சேர்த்து, முந்தைய ஆண்டைக் காட்டிலும் 8 சதவீதம் அதிகரித்து, 136.6 டன்னாக உயர்ந்துள்ளது.
இது மதிப்பின் அடிப்படையில் 20 சதவீதம் உயர்ந்து, 75,470 கோடி ரூபாயாக இருந்தது. முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தில் தங்கத்தின் தேவை 126.3 டன்னாக இருந்தது.
இந்தியாவின் மொத்த தங்கத்தின் தேவையில், ஆபரண தங்கத்தின் தேவை 4 சதவீதம் அதிகரித்து 91.9 டன்னில் இருந்து 95.5 டன்னாக அதிகரித்துள்ளது. தங்க கட்டி, நாணயம் உள்ளிட்ட தங்க முதலீட்டு தேவையில் 19 சதவீதம் அதிகரித்து 34.4 டன்னில் இருந்து 41.1 டன்னாக உயர்ந்துள்ளது.
இந்த ஆண்டு முழுவதற்கும் இந்தியாவில் தங்கத்தின் தேவை 700 முதல் 800 டன்களாக இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
தங்கத்தின் தேவை அதி கரிப்புக்கு, ரிசர்வ் வங்கி தங்கம் வாங்குவதும் முக்கிய காரணமாக உள்ளது-.
கடந்த ஆண்டு 16 டன் தங்கத்தை வாங்கியிருந்த நிலையில், நடப்பாண்டின் முதல் காலாண்டில் ஏற்கனவே 19 டன் தங்கத்தை ரிசர்வ் வங்கி வாங்கியுள்ளது.
தங்கத்தின் தேவை ஜன., - மார்ச் 2023 ஜன., - மார்ச் 2024 வளர்ச்சி(சதவீதத்தில்)
பிரிவு ஜன., - மார்ச் 2023
ஜன., - மார்ச் 2024 வளர்ச்சி(சதவீதத்தில்)
(டன்களில்)