மதுரையில் பல்கலை ஆராய்ச்சி பூங்கா அமைக்க டிட்கோ ஆலோசனை கூட்டம்
மதுரையில் பல்கலை ஆராய்ச்சி பூங்கா அமைக்க டிட்கோ ஆலோசனை கூட்டம்
ADDED : ஆக 11, 2024 01:57 AM

சென்னை:தமிழக அரசின் 'டிட்கோ' எனப்படும் தொழில் வளர்ச்சி நிறுவனம், கல்வி நிறுவனங்கள் மற்றும் தொழில் துறையினரை உள்ளடக்கிய, பல்கலை ஆராய்ச்சி பூங்காக்களை மாவட்டங்கள்தோறும் அமைக்க திட்டமிட்டு உள்ளது.
முதல்கட்டமாக, கோவை, மதுரை, திருச்சி, திருநெல்வேலி, காரைக்குடி ஆகிய நகரங்களில் அமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. முதல் பூங்கா, கோவையில் உள்ள 'டைசல்' வளாகத்தில் அமைய உள்ள நிலையில், அடுத்தகட்டமாக மதுரையில் அமைக்கும் முயற்சிகள் துவங்கி உள்ளன.
நேற்று முன்தினம், மதுரை காமராஜர் பல்கலை வளாகத்தில், டிட்கோ மேலாண் இயக்குனர் சந்தீப் நந்துாரி உள்ளிட்ட அதிகாரிகள், கல்வி நிறுவனங்கள் மற்றும் தொழில் துறையினருடன், ஆராய்ச்சி பூங்கா அமைப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தினர்.
முதல் கட்டமாக கோவை,மதுரை, திருச்சி, திருநெல்வேலி, காரைக்குடி நகரங்களில் ஆராய்ச்சி பூங்காக்கள் அமைக்க முடிவு

