
'கேஸ்ட்ரால்' நிறுவனத்தை கையகப்படுத்துகிறது அராம்கோ
சவுதி அரேபிய அரசுக்கு சொந்தமான எண்ணெய் நிறுவனமான அராம்கோ, பி.பி., எண்ணெய் நிறுவனத்தின் லுாப்ரிகன்ட்ஆயில் வணிகப் பிரிவை வாங்க பரிசீலித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதையடுத்து, பி.பி., நிறுவனத்தின் ஒரு பிரிவான, 'கேஸ்ட்ரால் இந்தியா' நிறுவனத்தின் பங்குகள்வியாழனன்று பங்கு சந்தைகளில் 13 சதவீதம் வரை உயர்ந்தன.
அராம்கோ நிறுவனம், கடந்த 2023ல், 23,161 கோடி ரூபாய் மதிப்பில் வாங்கிய, 'வால்வோலின் லுாப்ரிகன்ட்ஸ்' உடன் கேஸ்ட்ரால் நிறுவனத்தை இணைக்கலாம் என செய்திகள் தெரிவிக்கின்றன.
கடன் கட்டுப்பாடுகளை தளர்த்த உலக வங்கி வலியுறுத்தல்
சிறு, குறு, நடுத்தர தொழில்துறையான எம்.எஸ்-.எம்.இ.,க்கு கடன் கிடைப்பதை மேம்படுத்தும் முயற்சியில், கடன் கட்டுப்பாட்டை எளிதாக்க, வங்கிசாரா நிதி நிறுவனங்களுக்கான வட்டி வரம்பை அரசு நீக்க வேண்டும் என்று, உலக வங்கி தெரிவித்துள்ளது. மேலும், வங்கி அல்லாத நிதி நிறுவனங்களை வலுப்படுத்துவது குறித்தும் பல முக்கிய பரிந்துரைகளை அரசுக்கு வழங்கியுள்ளது. கடன் வழங்குவதில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை தடுக்க, அரசும், இந்திய ரிசர்வ் வங்கியும், மிகவும் கட்டமைக்கப்பட்ட மற்றும் நிரந்தர பணப்புழக்க செயல்முறைகளை செயல்படுத்துமாறு உலக வங்கி பரிந்துரைத்துள்ளது.