ADDED : ஜூலை 28, 2024 12:02 AM

சென்னை:அரிசி, பருப்பு வகை, மாவு வகை உள்ளிட்ட அத்தியாவசிய உணவு பொருட்கள், 25 கிலோவுக்கு கீழ் உள்ள பேக்கிற்கு, 5 சதவீதம் ஜி.எஸ்.டி., விதிக்கப்படுகிறது.
இதை ரத்து செய்யுமாறு மத்திய அரசுக்கு வணிகர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
உணவு பொருட்கள் எடையளவு சட்டத்தில் திருத்தம் செய்ய, தற்போது மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இதனால், உணவுப் பொருட்கள் எவ்வளவு எடை உடைய பாக்கெட்டாக இருந்தாலும், ஜி.எஸ்.டி., விதிக்கும் நிலை உருவாகும் என்பதால், உணவுப் பொருட்களின் விலை உயரக்கூடும்.
எனவே, எடையளவு சட்டத்தில் திருத்தம் செய்வதை கைவிடுமாறு, தமிழக அரிசி ஆலை வணிகர்கள் மற்றும் நெல் அரிசி வணிகர்கள் சங்கங்களின் சம்மேளன தலைவர் துளசிங்கம், செயலர் மோகன், டில்லியில், நேற்று முன்தினம் மத்திய உணவு துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷியை சந்தித்து மனு அளித்தனர்.