ADDED : மார் 07, 2025 11:50 PM

புதுடில்லி:திருச்சி - யாழ்பாணம் நேரடி விமான சேவையை இண்டிகோ துவங்கி உள்ளது.
பயணியரின் எண்ணிக்கை அடிப்படையில் இண்டிகோ ஏர்லைன்ஸ், உலகின் இரண்டாவது வேகமாக வளர்ந்து வரும் விமான நிறுவனமாக உருவெடுத்துள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.
அதிகாரப்பூர்வ விமான வழிகாட்டி எனும் ஓ.ஏ.ஜி.,யின் சமீபத்திய தரவுகளின்படி, இருக்கை திறனின் அடிப்படையில், கடந்த ஆண்டை விட 10.10 சதவீதம் அதிகரித்து, 13.49 கோடி பயணியர் எண்ணிக்கையை இண்டிகோ எட்டியுள்ளது.
இதையடுத்து, 10.40 சதவீதம் வளர்ச்சி பெற்ற கத்தார் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு அடுத்தபடியாக, இண்டிகோ, இந்தியாவின் மிகப்பெரிய விமான நிறுவனமாக இடம் பிடித்துள்ளது.
மேலும், கடந்த ஆண்டில், விமான இயக்கத்தின் அடிப்படையில், முந்தைய ஆண்டைக் காட்டிலும் 9.70 சதவீதம் வளர்ச்சியுடன், வேகமாக வளர்ந்து வரும் விமான நிறுவனமாக தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது.