ADDED : மே 29, 2024 01:35 AM

புதுடில்லி: தமிழகத்தை சேர்ந்த ட்ரோன் ஸ்டார்ட்அப் நிறுவனத்தில், முதலீடு செய்துள்ளதாக, 'ஜோஹோ' நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஸ்ரீதர் வேம்பு அறிவித்துள்ளார்.
தஞ்சாவூரை சேர்ந்த ஸ்டார்ட்அப் நிறுவனம், 'யாழி ஏரோஸ்பேஸ்' இந்நிறுவனம், பொது மற்றும் ராணுவ பயன்பாட்டுக்கான ட்ரோன்களை தயாரித்து, வழங்கி வருகிறது.
இந்தியாவில் உள்ள எந்தவொரு இடத்திற்கும், தங்களுடைய நெட்வொர்க் வாயிலாக 20 நிமிடங்களுக்குள் டெலிவரி செய்ய முடியும் என்று இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஸ்ரீதர் வேம்பு தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துகூறியிருப்பதாவது:
தினேஷ் பாலுராஜ் மற்றும் அனுகிரஹா தம்பதியர் இந்நிறுவனத்தை உருவாக்குவதற்கு, நெதர்லாந்தில் இருந்து தங்கள் சொந்த ஊரான தஞ்சாவூருக்கு வந்துஉள்ளனர். இந்நிறுவனத்தில் முதலீடு செய்வதில் எங்களுக்கு மகிழ்ச்சி.
இந்நிறுவனத்தின் ட்ரோன்கள், மணிக்கு 155 கிலோமீட்டர் வேகத்தில், 7 கிலோ வரையிலான எடையை சுமக்கக்கூடியதாக உள்ளது. இவ்வாறு தெரிவித்து உள்ளார்.