101 கோடி டி - சர்ட்டுகள் வெளிநாட்டு வர்த்தகம் அமோகம்
101 கோடி டி - சர்ட்டுகள் வெளிநாட்டு வர்த்தகம் அமோகம்
ADDED : மே 31, 2025 10:53 PM

திருப்பூர்,
நம் நாட்டில் இருந்து, கடந்த நிதியாண்டில் மட்டும், 20,400 கோடி ரூபாய் மதிப்புள்ள, 101 கோடி 'டி - சர்ட்'கள் ஏற்றுமதியாகியுள்ளன. இதுகுறித்து, 'இந்தியன் டெக்ஸ் பிரனர்ஸ்' கூட்டமைப்பின் கன்வீனர் பிரபு தாமோதரன் கூறியதாவது:
நம் நாட்டில் இருந்து, டி - சர்ட்' மற்றும் குழந்தைகளுக்கான ஆடை ஏற்றுமதி அதிகரித்துள்ளது. கடந்தாண்டு நிலவரப்படி, மாதாந்திர 'டி - சர்ட்' ஏற்றுமதி, எண்ணிக்கையில் 8.41 கோடியாக உயர்ந்துள்ளது. முந்தைய ஆண்டுகளில், மாதாந்திர ஏற்றுமதி, 7.4 கோடி என்ற அளவில் இருந்தது.
இருப்பினும், இதே வகை ஆடையை, சீனா, 76,500 கோடி ரூபாய்க்கும், வங்கதேசம், 63,750 கோடி ரூபாய் அளவுக்கும் ஏற்றுமதி செய்துள்ளது. பருத்தி மட்டுமல்லாது, செயற்கை நுாலிழை 'டி - சர்ட்' உற்பத்தியிலும் கவனம் செலுத்தினால், நம் ஏற்றுமதி இரட்டிப்பாக வாய்ப்புள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.