ராமநாதபுரத்தில் ரூ.1,000 கோடியில் ஆலை டாடா கெமிக்கல்சுக்கு 104 ஏக்கர் ஒதுக்கீடு
ராமநாதபுரத்தில் ரூ.1,000 கோடியில் ஆலை டாடா கெமிக்கல்சுக்கு 104 ஏக்கர் ஒதுக்கீடு
ADDED : ஜூலை 26, 2025 12:15 AM

சென்னை:டாடா கெமிக்கல்ஸ் நிறுவனம், 1,000 கோடி ரூபாய் முதலீட்டில் ஆலை அமைக்க, ராமநாதபுரம் மாவட்டத்தில், 104 ஏக்கரை அரசு ஒதுக்கியுள்ளது.
தமிழகத்தில் பன்னாட்டு தொழில் நிறுவனங்களின் முதலீடுகளை ஈர்க்க, 2024 ஜனவரியில், சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை தமிழக அரசு நடத்தியது.
இதில் பல்வேறு நிறுவனங்களுடன், 6.64 லட்சம் கோடி ரூபாய்க்கு முதலீட்டை ஈர்ப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டன.
அதன்படி, டாடா குழுமத்தை சேர்ந்த டாடா கெமிக்கல்ஸ் நிறுவனம், ராமநாதபுரத்தில், 1,000 கோடி ரூபாய் முதலீடு செய்ய ஒப்பந்தம் செய்தது.
அந்நிறுவனம் ஆலை அமைப்பதற்காக ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி தாலுகாவில் உள்ள வாலிநோக்கத்தில், 104 ஏக்கர் நிலத்தை தமிழக அரசு ஒதுக்கிஉள்ளது.
அங்கு விவசாயம், சோப்பு, உணவு உள்ளிட்ட தொழில்களுக்கு தேவையான ரசாயன பொருட்கள் உற்பத்தி செய்யப்பட உள்ளன.
இந்த ஆலையால், 500க்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.