கேன்சல் ஆன டிக்கெட்டுகளால் ரயில்வேக்கு ரூ.1,230 கோடி வருவாய்
கேன்சல் ஆன டிக்கெட்டுகளால் ரயில்வேக்கு ரூ.1,230 கோடி வருவாய்
ADDED : மார் 20, 2024 10:37 PM

புதுடில்லி:ரத்து செய்யப்பட்ட காத்திருப்பு பட்டியல் டிக்கெட்டுகள் வாயிலாக, இந்திய ரயில்வே, கடந்த மூன்று ஆண்டுகளில், 1,230 கோடி ரூபாய் வருவாய் ஈட்டி உள்ளது.
மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த விவேக் பாண்டே என்ற ஆர்வலர் , தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், இந்திய ரயில்வேயிடம் சில தகவல்களை கோரினார். இதற்கு, இந்திய ரயில்வே அளித்த பதில் வாயிலாக கிடைத்த தகவல்கள்:
* கடந்த 2021 முதல் நடப்பு 2024 வரையான காலத்தில், ரத்து செய்யப்பட்ட காத்திருப்பு பட்டியல் டிக்கெட்டுகள் வாயிலாக, 1,230 கோடி ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது
* நடப்பாண்டு ஜனவரியில் மட்டும், 45.86 லட்சம் டிக்கெட்டுகள் ரத்து செய்யப்பட்டதன் வாயிலாக, 43 கோடி ரூபாய் ஈட்டப்பட்டு உள்ளது.
* கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகை காலத்தில், 96.18 லட்சம் டிக்கெட்டுகள் ரத்து செய்யப்பட்டு உள்ளன. இதில் காத்திருப்பு பட்டியல் டிக்கெட்டுகள் 47.82 லட்சம்
* தீபாவளி சமயத்தில் மட்டும் மொத்த ரத்துகள் வாயிலாக, 10.37 கோடி ரூபாய் ஈட்டப்பட்டது.

