புதிய பங்கு வெளியீட்டுக்கு 2,000 மடங்கு விண்ணப்பம்
புதிய பங்கு வெளியீட்டுக்கு 2,000 மடங்கு விண்ணப்பம்
ADDED : டிச 19, 2024 11:22 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி:உ.பி.,யின் காசியாபாதைச் சேர்ந்த கட்டுமான நிறுவனமான 'நாக்டாக் இன்ப்ராஸ்ட்ரெக்சர்' புதிய பங்கு வெளியீடு வாயிலாக, 10 கோடி ரூபாய் முதலீட்டை திரட்ட முன்வந்தது. இதற்காக, ஒரு பங்கின் விலை 33 - -35 ரூபாயாக நிர்ணயித்து இருந்தது.
கடந்த டிச., 17ம் தேதி துவங்கி நேற்றுடன் பங்குகள் கேட்டு விண்ணப்பிக்க அவகாசம் முடிந்த நிலையில், 2,000 மடங்கு அதிகமாக, அதாவது 14,386 கோடி ரூபாய் முதலீட்டுக்கு விண்ணப்பங்கள் குவிந்தன.
இதற்கு, சில்லரை மற்றும் நிறுவன சாராத முதலீட்டாளர்கள் முறையே, 2,500 மற்றும் 2,600 மடங்கு விண்ணப்பித்தது முக்கிய காரணமாகும். வரும் டிச., 24ம் தேதி இந்நிறுவன பங்குகள், மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட உள்ளன.