202 அன்னிய நிறுவனங்களுக்கு பி.ஐ.எஸ்., முத்திரையில் விலக்கு
202 அன்னிய நிறுவனங்களுக்கு பி.ஐ.எஸ்., முத்திரையில் விலக்கு
ADDED : ஆக 13, 2025 02:10 AM

புதுடில்லி: நாட்டின் ஸ்டீல் இறக்குமதியை எளிதாக்கும் வகையில், 202 வெளிநாட்டு ஸ்டீல் தயாரிப்பாளர்கள், பி.ஐ.எஸ்., எனும் இந்திய தர நிர்ணய சான்றிதழ் பெறுவதில் இருந்து விலக்கு அளித்து, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
மத்திய உருக்கு அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது:
ஒருங்கிணைந்த ஸ்டீல் ஆலையில் இருந்து இறுதி தயாரிப்புகள் மேற்கொள்ள, மூலப்பொருட்களாக ஸ்டீல் வினியோகம் செய்வதற்கு, 202 வெளிநாடுகளை சேர்ந்த நிறுவனங்களுக்கு பி.ஐ.எஸ்., சான்று பெறுவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
இதன்படி, ஜப்பான், தென்கொரியா, ஜெர்மனி, இத்தாலி, பிரான்ஸ், ரஷ்யா, அமெரிக்கா உள்ளிட்ட 16 நாடுகளை சேர்ந்த ஸ்டீல் தயாரிப்பாளர்களுக்கு விலக்கு அளிக்கப்படும்.
இதில், அதிகபட்சமாக 80 ஜப்பான் நிறுவனங்களும், 50க்கும் மேற்பட்ட தென்கொரிய ஸ்டீல் தயாரிப்பு நிறுவனங்களும் இடம்பெற்றுள்ளன.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.