இந்தியாவில் 20சதவீதம் கோடீஸ்வரர்கள் 40 வயதுக்கு உட்பட்டவர்கள்
இந்தியாவில் 20சதவீதம் கோடீஸ்வரர்கள் 40 வயதுக்கு உட்பட்டவர்கள்
ADDED : டிச 22, 2024 02:06 AM

நாட்டில் உள்ள அதிக சொத்து மதிப்பு கொண்ட தனிநபர்களில், 20 சதவீதம் பேர் 40 வயதுக்கு உட்பட்டவர்கள் என, ரியல் எஸ்டேட் ஆராய்ச்சி நிறுவனமான 'அனராக்' தன் ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது. ஏறத்தாழ 8.40 கோடி ரூபாய்க்கும் அதிகமான சொத்து மதிப்பு கொண்டவர்கள், அதிக சொத்து மதிப்பு கொண்டவர்களாகவும்; 250 கோடி ரூபாய்க்கும் அதிகமான சொத்து மதிப்பு கொண்டவர்கள், மிக அதிக சொத்து மதிப்பு கொண்டவர்களாகவும் வகைப்படுத்தப்பட்டுள்ளனர்.
அதிக சொத்து மதிப்பு கொண்ட தனிநபர்கள்
2024 - 8.50 லட்சம் பேர்
2027 - 16.50 லட்சம் (கணிப்பு)
30 வயதுக்கு கீழ் 15%
40 வயதுக்கு கீழ் 20%
மிக அதிக சொத்து மதிப்பு கொண்ட தனி நபர்கள்
2024 - 13,600 பேர்
2028 - 20,400 (கணிப்பு)
உலகளவில் இந்தியா தற்போது 6வது இடம்
சொத்து மதிப்பு உயர முக்கிய காரணங்கள்
* தொழில்நுட்ப துறை * நிதி தொழில்நுட்ப துறை
* ஸ்டார்ட் அப் * தயாரிப்பு துறை * ரியல் எஸ்டேட்
* பங்கு சந்தை
முதலீடுகள்32%
ரியல் எஸ்டேட்20%
பங்கு சந்தை8%
கிரிப்டோ கரன்சி
நடப்பாண்டு மொத்த வீடுகளின் விற்பனையில், ஆடம்பர வீடுகளின் பங்கு 28 சதவீதமாக அதிகரித்துள்ளது. மும்பை, டில்லி, பெங்களூரு நகரங்களே அதிகம் விரும்பப்பட்டது.
நடப்பாண்டில், மிக அதிக சொத்து மதிப்பு கொண்டவர்களில் 10 சதவீதம் பேர், போர்ச்சுகல், மால்டா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளில் மாற்று குடியுரிமை பெற்றுள்ளனர். 14 சதவீதம் பேர் துபாய், லண்டன், சிங்கப்பூர் நாடுகளில் சொத்துக்களை வாங்கியுள்ளனர்.
இந்த ஆண்டு, அதிக சொத்து மதிப்பு கொண்டவர்களில் 37 சதவீதம் பேர் லாம்போர்கினி, போர்ஸ், ரோல்ஸ் ராய்ஸ் கார் வாங்கியுள்ளனர்.