என்.எல்.சி., ஒப்பந்த தொழிலாளர்கள் 2,300 பேர் பணி நிரந்தரம்
என்.எல்.சி., ஒப்பந்த தொழிலாளர்கள் 2,300 பேர் பணி நிரந்தரம்
ADDED : டிச 13, 2025 01:16 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெய்வேலி: என்.எல்.சி., ஒப்பந்த தொழிலாளர்கள் 2,300 பேரின் பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளது.
நெய்வேலி டவுன்ஷிப் வட்டம், 11ல் உள்ள லிக்னைட் அரங்கத்தில் என்.எல்.சி.,யின், 397 சொசைட்டி தொழிலாளர்களுக்கு நிரந்தர பணி நியமன ஆணை வழங்கும் விழா நடந்தது.
மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டி காணொலி வாயிலாக தலைமை தாங்கினார். மத்திய தகவல் ஒலிபரப்பு துறை இணை அமைச்சர் முருகன், நிலக்கரி அமைச்சகத்தின் கூடுதல் செயலர் ரூபிந்தர் ப்ரார் காணொலி வாயிலாக பங்கேற்றனர்.
அமைச்சர் கிஷன் ரெட்டி பேசுகையில், “என்.எல்.சி.,யில் 2015 முதல் தற்போது வரை 2,300 ஒப்பந்த தொழிலாளர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளனர். என்.எல்.சி., இந்தியா நிறுவனம் வரும் ஆண்டுகளில் புதிய மைல் கல்லை எட்டும்,” என்றார்.

