ADDED : மார் 19, 2025 11:26 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில், சிறு, குறு, நடுத்தர தொழில் துறையுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்ததில், தமிழகத்தில் இதுவரை, 2,325 நிறுவனங்கள், 25,003 கோடி ரூபாய் முதலீட்டில் தொழில்களை துவக்கியுள்ளன.
தமிழக அரசு, தொழில் நிறுவனங்களின் முதலீட்டை ஈர்க்க, 2024 ஜனவரியில் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தியது. இதன் வாயிலாக, பல துறைகளில் ஒட்டுமொத்தமாக, 6.64 லட்சம் கோடி ரூபாய்க்கு முதலீட்டை ஈர்க்க பல்வேறு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்தது.
அதன்படி, சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை சார்பில், 5,068 நிறுவனங்கள் வாயிலாக, 63,573 கோடி ரூபாய்க்கு முதலீடுகள் ஈர்க்கப்பட்டன. இதனால், 89,519 வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.