ADDED : நவ 14, 2025 12:41 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
த ங்கள் தளத்தில் பதிவு செய்துள்ள முதலீட்டாளர்களின் கணக்கு, நவம்பரில் முதல் முறையாக 24 கோடி ரூபாயை தாண்டியுள்ளதாக தேசிய பங்கு சந்தை தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டில் தான், முதலீட்டாளர்களின் கணக்கு 20 கோடி ரூபாயை தாண்டியிருந்தது. டிஜிட்டல் மயமாக்கல், கொள்கை ஆதரவு போன்றவை நம் நாட்டின் முதலீட்டு போக்கை எவ்வாறு மாற்றியுள்ளது என்பதை இந்த வேகமான எழுச்சி பிரதிபலிக்கிறது.
முதலீட்டாளர்கள், பல தரகர்களிடம் கணக்குகளை பராமரிக்க முடியும் என்பதால், மொத்த வர்த்தக கணக்குகளின் எண்ணிக்கை, முதலீட்டாளர்களின் எண்ணிக்கையை விட அதிகமாகும்.

