ADDED : நவ 19, 2024 11:41 PM

புதுடில்லி:இலக்கு எட்டப்பட்டபோதிலும், 'பி.எம்., இ - டிரைவ்' திட்டத்தின் கீழ், மின்சார மூன்று சக்கர சரக்கு வாகனங்களுக்கு வழங்கப்பட்டு வந்த மானியம், தொடர்வதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கடந்த மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட பி.எம்., இ - டிரைவ் திட்டத்தின் கீழ் 80,546 மின்சார மூன்று சக்கர சரக்கு வாகனங்களுக்கு, மானியம் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
இந்த இலக்கு இம்மாதமே எட்டப்பட்டதால், நடப்பாண்டில் இனி இந்த வாகனங்களை வாங்குவோருக்கு மானியம் கிடைக்காது என, தகவல் வெளியானது.
இந்நிலையில், அடுத்த நிதியாண்டில் வழங்கப்பட இருந்த மானியம், கடந்த நவம்பர் 8ம் தேதி முதலே செயல்பாட்டுக்கு வந்துள்ளதாக, மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி, இதுவரை இந்த வாகனங்களுக்கு அதிகபட்சமாக 50,000 ரூபாய் மானியம் வழங்கப்பட்டு வந்த நிலையில், இனி 25,000 ரூபாய் வரை மட்டுமே வழங்கப்படும் என தெரிகிறது.

