ADDED : மார் 26, 2025 10:55 PM

புதுடில்லி:ஹரியானாவின் கார்கோடாவில் 7,410 கோடி ரூபாய் முதலீட்டில், மூன்றாவது கார் உற்பத்தி ஆலையை அமைக்க, மாருதி சுசூகி இயக்குநர்கள் குழு ஒப்புதல் அளித்து உள்ளது.
முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசூகி நிறுவனத்துக்கு, ஹரியானாவின் கார்கோடாவில் ஏற்கனவே ஆண்டுக்கு 2.5 லட்சம் கார்கள் உற்பத்தி திறன் கொண்ட ஆலை உள்ளது. இரண்டாவதாக, 2.5 லட்சம் கார்கள் உற்பத்தி திறன் கொண்ட ஆலைக்கான கட்டுமானப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், உள்நாட்டு சந்தைக்கு மட்டுமின்றி; ஏற்றுமதிக்கும் தேவை அதிகரித்து வருவதால், கார்கோடாவில் 7,410 கோடி ரூபாய் முதலீட்டில், ஆண்டுக்கு 2.5 லட்சம் கார்கள் உற்பத்தி திறன் கொண்ட புதிய ஆலையை அமைக்க, மாருதி இயக்குநர்கள் குழு கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது. இதனுடன் சேர்த்து, வரும் 2029க்குள், ஆண்டுக்கு 7.5 லட்சம் கார்கள் உற்பத்தி திறன் கொண்ட ஆலையாக இப்பகுதி மாறும்.