ADDED : ஜன 15, 2025 11:59 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை : 'எக்கோபாக்ஸ் இண்டஸ்ட்ரியல் பார்க்ஸ்' நிறுவனம், சென்னை அருகில் 400 கோடி ரூபாய் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது.
தொழில் துறை ரியல் எஸ்டேட் மற்றும் சேமிப்பு கிடங்கு கட்டமைப்பு துறையில் ஈடுபட்டு வரும் இந்நிறுவனம், சென்னைக்கு அருகில் காஞ்சிபுரம் மாவட்டம், மண்ணுாரில், 400 கோடி ரூபாய் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது.
இதற்காக, 50 ஏக்கர் நிலம் வாங்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அங்கு, 12 லட்சம் சதுர அடியில் பசுமை மேம்பாட்டு திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன.

