ADDED : மார் 03, 2024 02:24 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி:'நெப்ட்' என்னும் 'தேசிய மின்னணு நிதி பரிமாற்றம்' வாயிலாக, பிப்ரவரி 29ம் தேதி, ஒரே நாளில் 4.10 கோடி பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதுவே, நெப்ட் முறையில், இதுவரை ஒரே நாளில் மேற்கொள்ளப்பட்ட அதிகபட்ச பரிவர்த்தனைகளாகும்.
நெப்ட் மற்றும் 'ஆர்.டி.ஜி.எஸ்' இரண்டும் பணப் பரிமாற்றம் செய்ய பயன்படுத்தப்படுபவை. இவற்றை ரிசர்வ் வங்கி நிர்வகிக்கிறது.
ஆர்.டி.ஜி.எஸ்., வாயிலாக கடந்தாண்டு மார்ச் 31ம் தேதி, ஒரே நாளில் அதிகபட்சமாக 16.25 லட்சம் பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டன.

