sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 22, 2025 ,புரட்டாசி 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

பொது

/

சென்னையில் 5 ஸ்டார் வீடு! தாஜ் ஹோட்டல் சொகுசு வாழ்க்கை!

/

சென்னையில் 5 ஸ்டார் வீடு! தாஜ் ஹோட்டல் சொகுசு வாழ்க்கை!

சென்னையில் 5 ஸ்டார் வீடு! தாஜ் ஹோட்டல் சொகுசு வாழ்க்கை!

சென்னையில் 5 ஸ்டார் வீடு! தாஜ் ஹோட்டல் சொகுசு வாழ்க்கை!


UPDATED : ஜூன் 23, 2025 05:35 PM

ADDED : ஜூன் 23, 2025 01:15 PM

Google News

UPDATED : ஜூன் 23, 2025 05:35 PM ADDED : ஜூன் 23, 2025 01:15 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னையின் முதல் 5 ஸ்டார் குடியிருப்பு. வாய்பிளக்க வைக்கும் வசதிகள். VIPக்கள் குறி வைத்த ஏரியா.

சென்னையின் 'ஆண்டிலியா' எங்க வரப்போகுது தெரியுமா ?


ஆண்டிலியாவா? அப்படி என்றால் என்ன? உலகத்தின் விலை உயர்ந்த வீடுகளில் இரண்டாம் இடத்தில் உள்ளது தான் இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர் முகேஷ் அம்பானியின் ஆண்டிலியா வீடு தான் அது. அப்படியொரு குடியிருப்பு சென்னையில் அமைகிறது என்றால் நம்ப முடியுமா?

சென்னையின் நுங்கம்பாக்கத்தில் உள்ள நெல்சன் மாணிக்கம் சாலையில், பல மிக முக்கிய புள்ளிகளின் வாழும் இடமாக இன்னொரு ஆண்டிலியாவாக உருவெடுத்து வருகிறதுTAJ SKY VIEW திட்டம். இந்த பகுதியை கடந்து செல்வோர் ”தாஜ்” என்ற பெயரை பார்த்து, இங்கு 5 ஸ்டார் ஓட்டல் வரப்போகிறது என நினைத்து இருக்கலாம். அதில் குறிப்பாக உள்ள 'Residences'என்ற வார்த்தையை கவனித்தீர்களா?

பணக்காரர்கள் வசிப்பிடமாக உள்ள போயஸ் கார்டன், போட் கிளப் பகுதிகளை போலவே ஆடம்பர வாழ்க்கைகான இடமாக இந்த பகுதியும் மாறப்போகிறது. தாஜ் என்ற பெயரை கேட்டாலே அங்குள்ள நட்சத்திர விடுதிகளும், அதில் கிடைக்கும் விருந்தோம்பலும் தான் நினைவுக்கு வரும். ஒரு ஸ்டார் ஓட்டலில் தங்கும் போது எப்படிப்பட்ட அனுபவத்தை பெற முடியுமோ, அதே போல செட் அப்பில் கட்டப்படும் குடியிருப்புகள் எவ்வளவு பிரம்மாண்டமாக இருக்கும் என்பதை யோசித்து பாருங்கள்.

தாஜ் ஸ்கை வியூ எப்படி இருக்கும்?


சென்னையில் பிரபலமாக இருக்கும் AMPA குழுமம் மற்றும் 120 வருடமாக ஓட்டல் நிறுவனத்தில் நம்பர் 1 ஆக இருக்கும் தாஜ் நிறுவனம் கைகோர்த்து தான் இந்த TAJ SKY VIEWஎன்ற திட்டம் உருவெடுத்துள்ளது. இந்த குடியிருப்புகளில் தங்குவோருக்கு தாஜ் நிறுவனம் அனைத்து விதமான சர்வீஸ்களையும் வழங்குகிறது. ஸ்டார் ஓட்டலில் தங்கி இருந்தால் எப்படிப்பட்ட அனுபவம் இருக்குமோ அதை அனுபவத்தை உங்கள் வீட்டில் தங்கியிருந்த படியே அனுபவிக்க முடியும்.

Image 1434390

உலக தர வல்லுனர்கள் உருவாக்கும் பிரம்மாண்டம்


இதன் முக்கிய அம்சம் என்னவென்றால், 100 வருடத்துக்கு மேலும் கட்டடம் நிலைத்து நிற்க ஐஐடி மெட்ராஸுடன் ஆய்வு மேற்கொண்டு சிறப்பான தொழில்நுட்பத்துடன், உலக தர வல்லுனர்களுடன் இந்த கட்டடம் கட்டப்படுகிறது. தாஜ் கட்டமைக்கும் முதல் பிராண்ட் குடியிருப்பும் இதுதான். மூன்று வகைகளில் இந்த கட்டடங்கள் கட்டப்படுகிறது. முதலில் 5 ஸ்டார் குடியிருப்புகள், நடுவில் அலுவலக கட்டடம், இன்னொரு பக்கம் 5 ஸ்டார் ஓட்டல் என அமைக்கப்பட்டு இருக்கிறது. கழுகு பார்வையில் சென்னையை பார்க்க வேண்டுமென்றால் விமானத்தில் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. TAJ SKY VIEWவில் இருந்து பார்த்தாலே ஒட்டுமொத்த சென்னையையே பார்க்கலாம். அதுவும் முதல் தளத்தில் இருந்து பார்த்தாலே சென்னை மிகவும் சிங்காரமாக தெரியும்.

முக்கிய சாலைகளை இணைக்கும் வழிகள்:


நெல்சன் மாணிக்கம் சாலையில் இருந்து சென்னையின் மற்ற பகுதிகளை இணைக்கவும் சாலை வசதிகள் உள்ளன. மதுரவாயல் வழியாக சென்னை துறைமுகத்துக்கு 20.6 கிமீ தொலைவில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்கவுள்ளனர். அது வந்துவிட்டால் சுற்றியுள்ள பகுதிகள் வாய்பிளக்கும்அளவுக்கு விரைவாக வளர்ச்சி பெறும்.

குடியிருப்பா? மாளிகையா?


இது குடியிருப்பா இல்லை மாளிகையா என தோன்ற வைக்கும் அளவிற்கு வசதிகள் வரவுள்ளது.

* 3500 சதுர அடி அளவில் கிளப் லவுஞ்ச்

* தாஜ் ஸ்பெக்டர் தியேட்டர்

* பிரம்மாண்ட விருந்தினர் அமருமிடம்

* ரூப் டாப் பார்டி ஹால்

* கரோக்கி அறைகள்

* பார்பிக்யூ டெக்

* பொழுதுபோக்கு உயர்மட்ட பூங்கா

* மன அழுத்தத்தை குறைக்கும் சனா அறை

* 25 மீட்டர் நீச்சல்குளம்

* கூடைப்பந்து மைதானம்

* யோகா மற்றும் தியான கூடம்

* ஸ்குவாஷ் விளையாட்டு பகுதி

* பவுலிங் ஏலி (Bowling alley)

* பாட்மிண்டன் விளையாட்டு பகுதி

* உட்புற கோல்ப் விளையாட்டு பகுதி

* பூக்கர், பூல் டேபிள் விளையாடும் இடம்

* வாக்கிங் பகுதி

* குழந்தைகளுக்காக தனி விளையாட்டு பகுதி

இப்படி பல அம்சங்கள் அடங்கிய வசதிகள் இந்த ஒரே குடியிருப்பில் வரவுள்ளது.



கட்டட வடிவமைப்பு, உட்புற டிசைன், போக்குவரத்து வசதி என இப்படி குடியிருப்புகளுக்கு வசதிகள் ஏற்படுத்த 15 டாப் நிறுவனங்கள் இந்த திட்டத்தோடு கைக்கோர்த்துள்ளனர். உலக தரம் வாய்ந்த அனுபவத்தை கொடுக்கவே இத்தனையும் செய்யப்படுகிறது.

AMPA குழுமத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனரான அம்பா பழனியப்பன் குடியிருப்புவாசிகளுக்கு உத்தரவாதம் கொடுக்கிறார். அவர் கூறியதாவது, ''ஷாப்பிங் போக வேண்டுமா அம்பா மால் உள்ளது. குழந்தைகளை படிக்க வைக்க அம்பா சிஷ்யா பள்ளி உள்ளது. மருத்துவ உதவிக்கு எம்ஜிஎம் மருத்துவமனை உள்ளது. இவையெல்லாம் குடியிருப்பு பகுதிகளுக்கு 1 கிலோ மீட்டர் தூரத்துக்குள்ளே அமைந்துள்ளது.

850 கோடி மதிப்பில் கட்டப்படும் இந்த பங்களா நிச்சயமாக பிரம்மாண்ட அனுபவத்தை கொடுக்கும். ஆடம்பரமான வாழ்க்கை முறையை அனுபவிக்க நிச்சயம் இதை தேர்வு செய்யலாம். இதுதான் சென்னையின் உயரமான 5 ஸ்டார் ஓட்டல் மற்றும் குடியிருப்பு. வீட்டில் இருந்தபடியே ஒரு பட்டன் தட்டினால், ஓட்டலில் கிடைக்கும் அனைத்து வசதிகளையும் தாஜ் செய்து கொடுக்கும். 123 வீடுகள். 2507 சதுர அடி முதல் 5689 சதர அடி வரை இந்த குடியிருப்புகள் கட்டித்தரப்படும். இரண்டு வீடுகளும் ஒன்றாகவும், தாஜ் கொடுக்கும் டிசைன்களில் வாடிக்கையாளர்களுக்கு ஏற்ப குடியிருப்புகள் கட்டித்தரப்படும்,'' என்றார்.

இது குறித்து அம்பா சிஷ்யா பள்ளிம்பா ஸ்கை வியூ குடியிருப்பு மேம்பாட்டு மேலாளர் கூறும் போது, ''போக்குவரத்து நெரிசல் அதிகம் இருக்கும் இந்த பகுதியில் இப்படியொரு 5 ஸ்டார் குடியிருப்பு வரும்போது அதையும் சமாளிக்க முடியும் என்கிறார். அம்பா சிஷ்யா பள்ளியின்தாஜ் ஸ்கை வியூவில் ஒரே நேரத்தில் 150 கார்கள் உள்ளே வலம் வரலாம். தனித்தனியாக பார்கிங் வசதிகள் உள்ளன. நுழைவாயில், வெளியேறும் பகுதி தனித்தனியாக இருப்பதால் போக்குவரத்து பிரச்சனையை சமாளிக்க முடியும். உயரமாக கட்டடம் கட்டி இருப்பதால், கூவம் அருகே பில்டிங் இருந்தாலும் வெள்ளம் ஏற்பட வாய்ப்பு இல்லை.'' என்றார்.

இங்கு விஐபி, விவிஐபி போன்றவர்கள் அதிகம் தங்கி இருப்பதால் பாதுகாப்பு வசதிகள் அதிகம் ஏற்படுத்தப்படும். ஒவ்வொரு வீட்டுக்கும் தனித்தனி லிப்ட் வசதிகளும் உள்ளன. அங்கு பணிபுரிபவர்களுக்காக உயர்தர பாதுகாப்பு வசதிகளுடன் தனி லிப்ட் அமைக்கப்பட்டுள்ளது.மொத்தமாக இந்த பணிகள் முடிந்து, 2027இறுதியில் இவை பயன்பாட்டுக்கு வரும் என உறுதி அளித்துள்ளனர்.

மேலும் விவரங்களுக்கு;

அழைக்கவும்: +91 74500 85008.






      Dinamalar
      Follow us