ADDED : ஜன 19, 2024 10:26 PM

சென்னை:மத்திய அரசு சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு உதவும் வகையில், 'ரேம்ப்' எனப்படும் நிறுவனங்களின் செயல் திறனை மேம்படுத்துததல் மற்றும் துரிதப்படுத்துதல் ஆகியவற்றுக்கான திட்டத்தை துவக்கியுள்ளது.
இத்திட்டத்தின் கீழ், தொழில் நிறுவனங்களின் செயல்பாட்டை மேம்படுத்த உதவிகள் வழங்கப்படும். இத்திட்டத்திற்கு, உலக வங்கி நிதி உதவி செய்கிறது.
தமிழகத்தில், 'ரேப்ம்' திட்டத்தை செயல்படுத்த, தமிழக அரசின் சிறு, குறு, நடுத்தர தொழில் துறைக்கு, 164 கோடி ரூபாய் நிதி உதவி வழங்க, 2023 நவம்பரில் மத்திய அரசு ஒப்புதல் அளித்தது.
இதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் உள்ள அனைத்து தொழில் துறை மற்றும் தொழில் நிறுவனங்கள் தொடர்பான புள்ளி விபரங்களை சேகரிப்பது, ஒருங்கிணைந்த இணையதளம் உருவாக்கம் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
மேலும், மத்திய, மாநில அரசு திட்டங்கள் குறித்து நிறுவனங்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது, பசுமை திட்டங்களை செயல்படுத்துவது உள்ளிட்ட பணிகளையும் மேற்கொள்ள திட்டமிடப்பட்டு உள்ளது.
இந்நிலையில், தமிழகத்திற்கு என ஒதுக்கிய நிதியில் தற்போது, மத்திய அரசு, 50 கோடி ரூபாயை விடுவித்துள்ளது.