ADDED : ஜூன் 18, 2025 11:43 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சூளகிரி:கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் சிப்காட், 1, 2 மற்றும் சிட்கோ தொழிற்பேட்டைகள் உள்ளன. இங்கு, 150க்கும் மேற்பட்ட பெரிய நிறுவனங்கள், 2,500க்கும் மேற்பட்ட சிறு, குறு, நடுத்தர தொழிற்சாலைகள் இயங்குகின்றன. இவற்றின் வாயிலாக, ஒன்றரை லட்சத்திற்கும் மேலான தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.
இந்நிலையில், ஓசூர் அருகே சூளகிரியில், 3வது சிப்காட், 1,021 ஏக்கர் பரப்பில் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 95 தனியார் நிறுவனங்கள் தொழில் துவங்க இடம் வாங்கியுள்ளன. இதனால் நேரடியாகவும், மறைமுகமாகவும், 50,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இடம் வாங்கியுள்ள நிறுவனங்கள்
ஷெப்லர்
மைவா பார்மா
பிரேக்ஸ் இந்தியா
கான்டினென்டல் இன்ஜின்
மெர்லின்ஹாக் ஏரோஸ்பேஸ்