தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பொது/'ஆன்லைன் செயலிகள் வாயிலாக ரூ.64,656 கோடி கடன் வினியோகம்'

'ஆன்லைன் செயலிகள் வாயிலாக ரூ.64,656 கோடி கடன் வினியோகம்'

'ஆன்லைன் செயலிகள் வாயிலாக ரூ.64,656 கோடி கடன் வினியோகம்'


UPDATED : அக் 04, 2026 04:31 AM

ADDED : அக் 03, 2026 11:14 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 04, 2026 04:31 AM ADDED : அக் 03, 2026 11:14 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி: நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில், வங்கி சாரா நிதி நிறுவனங்கள், ஆன்லைன் செயலிகள் வாயிலாக 64,656 கோடி ரூபாய் தனிநபர் கடன்களை வழங்கியுள்ளதாக 'பேஸ்' அமைப்பின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

கடந்த 2025 ஏப்., - ஜூன் வரையிலான காலாண்டுடன் ஒப்பிடுகையில், ஆன்லைன் கடன்களின் எண்ணிக்கை 14 சதவீதம் அதிகரித்துள்ளது. ஒட்டுமொத்த தனிநபர் கடன்களின் எண்ணிக்கையில் 70 சதவீதமும், கடன் மதிப்பில் 22 சதவீதமும் ஆன்லைன் வாயிலாக வழங்கப்பட்டவைகளாகும்.

கடனை ஒழுங்காக திருப்பி செலுத்திவரும் பாதுகாப்பான வாடிக்கையாளர்களுக்கே 60 சதவீத கடன்கள் வழங்கப்பட்டுள்ளன.

90 நாட்களுக்கு மேல் திருப்பி செலுத்தப்படாத கடன்களின் அளவு 1.40 சதவீதமாக மட்டுமே உள்ளது. கடன் பெற்றவர்களில், 35 வயதுக்கு உட்பட்டோரின் பங்கு 58 சதவீதமும், சிறிய நகரங்களை சேர்ந்தவர்களின் பங்கு 40 சதவீதமும், பெண்களின் பங்கு 18 சதவீதமும் உள்ளது.

Image 1626106

சராசரி தனிநபர் கடன் (ரூபாயில்)

*ஆன்லைன் (என்.பி.எப்.சி.,) : 18,802

*நேரடி (என்.பி.எப்.சி.,) : 70,025

*வங்கிகள் : 4,52,212

ஆன்லைன் கடன் நிலுவை

2026 ஏப்., - ஜூன்: 1.54

2025 ஏப்., - ஜூன் : 1.20

உயர்வு 28%

(ரூபாய் லட்சம் கோடியில்)

கடன் பெற்றவர்கள்

35வயதுக்கு உட்பட்டோர்: 58%

பெண்களின் பங்கு:18%

சிறு நகரங்களை சேர்ந்தோர்: 40%

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us