'புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் 77 சதவிகிதம் முதலீடாக மாறியுள்ளன'
'புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் 77 சதவிகிதம் முதலீடாக மாறியுள்ளன'
ADDED : ஆக 21, 2025 12:55 AM

சென்னை:''கடந்த, 2021 முதல் இதுவரை பல்வேறு தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்ததில், 77 சதவீதம் முதலீடுகளாக மாறியுள்ளன,'' என, தொழில் துறை அமைச்சர் ராஜா தெரிவித்தார்.
சென்னையில் அவர் அளித்த பேட்டி:
தமிழக அரசைப் பொறுத்தவரை, எந்த ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டாலும், அதனால் எவ்வளவு முதலீடு வருகிறது என்று பார்ப்பதை விட, எத்தனை நபருக்கு வேலைவாய்ப்பு உருவாகிறது, எங்கு உருவாகிறது என்பதை தான் பார்க்கிறோம்.
புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திட்ட பின், அதை தொடர்ந்து கண்காணித்து, தொழில் துவங்க ஒப்புதல் உடனுக்குடன் வழங்கப்படுகிறது.
கடந்த, 2024 உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில், 631 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டதில், 80 சதவீதம் அதாவது, 525 நிறுவனங்கள் தொழில் துவங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன.
கடந்த, 2021 முதல் இதுவரை, தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டதில், 77 சதவீதம் முதலீடுகளாக மாறியுள்ளன.
இவ்வாறு அவர் கூறி னார்.