ADDED : ஜூன் 02, 2026 06:53 AM

சென்னை: நடப்பு சீசனில் ராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து ஜெர்மனி, அமெரிக்காவுக்கு 85 டன் ஆர்கானிக் மிளகாய் வற்றல் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து, கமுதி பாரம்பரிய இயற்கை பயிர் உற்பத்தியாளர் சங்கத்தின் இயக்குநர் ராமர் கூறியதாவது:
ராமநாதபுரம் மாவட்டத்தில் 15,000 ஹெக்டேரில் மிளகாய் சாகுபடி செய்யப்பட்டு, ஆண்டுக்கு 13,000 டன் உற்பத்தியாகிறது. நடப்பு மிளகாய் சீசன் கடந்த ஏப்., மாதம் தொடங்கியது. அப்போது, 42 டன் மிளகாய் ஏற்றுமதி செய்யப்பட்டது.
தற்போது 43 டன்னுக்கு ஆர்டர் கிடைத்து, பரிசோதனை முடிந்து ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. நடப்பு சீசனில் மொத்தம் 85 டன் சம்பா மிளகாய், தனியார் நிறுவனத்தின் வாயிலாக ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.
கமுதியிலிருந்து மொத்தம் 700 டன் மிளகாய் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இதில், 85 டன் மிளகாய் எங்கள் சங்கத்தின் சார்பில் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு கூறினார்.
மிளகாய் உற்பத்தி
13,000 டன்
ஏற்றுமதி
700 டன்
ஆர்கானிக் மிளகாய் ஏற்றுமதி
85 டன்
ஏற்றுமதி விலை (குவின்டால்)
ஏப்ரல்: ரூ.25,000
மே: ரூ.24,500
