ADDED : ஜூன் 02, 2026 06:53 AM

புதுடில்லி: நடப்பு நிதியாண்டை வலுவாக தொடங்கிய கார் தயாரிப்பு நிறுவனங்கள், அந்த விற்பனை வேகத்தை மே மாதத்திலும் தக்க வைத்துள்ளன.
எரிபொருள் விலை உயர்வு போன்ற சவால்களுக்கு மத்தியிலும் கார் உற்பத்தி நிறுவனங்கள் விற்பனையில் சிறப்பான வளர்ச்சி கண்டுள்ளன. குறிப்பாக 'மாருதி சுசூகி', 'கியா இந்தியா' ஆகிய முன்னணி நிறுவனங்கள் விற்பனையில் புதிய உச்சம் தொட்டன.
மாருதி சுசூகி, மே மாதத்தில் கிட்டத்தட்ட 1.94 லட்சம் கார்களை உள்நாட்டில் விற்பனை செய்துள்ளது. சிறிய மற்றும் நடுத்தர ரக கார் பிரிவில் ஒட்டுமொத்தமாக 42 சதவீத வளர்ச்சி கண்டுள்ளது.
'டாடா மோட்டார்ஸ்' 42 சதவீத வளர்ச்சியுடன் 59,090 கார்களையும்; 'மஹிந்திரா' 11 சதவீத உயர்வுடன் 58,021 வாகனங்களையும் உள்நாட்டு சந்தையில் விற்பனை செய்துள்ளன.
'ஹூண்டாய்' 47,837 வாகனங்களையும், 'டொயோட்டா' 30,574 வாகனங்களையும் விற்றுள்ளன.
கியா இந்தியா நிறுவனம் 23.60 சதவீத வளர்ச்சியுடன் 27,586 வாகனங்களை விற்பனை செய்து மே மாதத்தில் புதிய உச்சத்தை தொட்டுள்ளது. எம்.ஜி., மோட்டார் நிறுவனம் 6,048 வாகனங்களை விற்பனை செய்துள்ளது.
