ADDED : ஜூன் 10, 2025 07:06 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இந்தியாவில் வெறும் 7 சதவீத வாரிசுகள் மட்டுமே குடும்பத் தொழிலை தொடர விரும்புவதாக, எச்.எஸ்.பி.சி., வங்கியின் சமீபத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எச்.எஸ்.பி.சி., குளோபல் பிரைவேட் பேங்கிங் நிறுவனம், இந்தியா, அமெரிக்கா, சீனா உள்ளிட்ட 10 நாடுகளை சேர்ந்த, குறைந்தபட்சம் 17 கோடி ரூபாய் முதலீடு செய்யக்கூடிய சொத்துக்களை கொண்ட வணிக உரிமையாளர்களிடம், வாரிசுரிமைக்கான தயார்நிலை குறித்து ஆய்வு நடத்தியுள்ளது.