sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

பொது

/

' ‛ இ - வே' பில் வழங்கல் டிசம்பரில் 9.52 கோடி

/

' ‛ இ - வே' பில் வழங்கல் டிசம்பரில் 9.52 கோடி

' ‛ இ - வே' பில் வழங்கல் டிசம்பரில் 9.52 கோடி

' ‛ இ - வே' பில் வழங்கல் டிசம்பரில் 9.52 கோடி


ADDED : ஜன 11, 2024 01:18 AM

Google News

ADDED : ஜன 11, 2024 01:18 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி:கடந்தாண்டு டிசம்பர் மாதத்தில் வழங்கப்பட்ட 'இ - வே' பில்கள் 9.52 கோடியாக அதிகரித்துள்ளது. கடந்த அக்டோபர் மாதத்தில் சாதனை உச்சமான 10.03 கோடி இ - வே பில்களை எட்டிய பின், இதுவே இரண்டாவது அதிகபட்ச உயர்வாகும்.

கடந்த நவம்பரில் இது 8.75 கோடியாக சரிந்தது குறிப்பிடத்தக்கது. டிசம்பரில் வழங்கப்பட்ட இ - வே பில்கள், ஜனவரி மற்றும் பிப்ரவரி மாத ஜி.எஸ்.டி., வருவாயில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும்.

எலக்ட்ரானிக் மற்றும் ஆட்டோமொபைல் பொருட்களின் அதிக விற்பனை காரணமாக, டிசம்பரில் இ - வே பில் வழங்கல் அதிகரித்திருக்கக் கூடும் என்று கூறப்படுகிறது.

மேலும், நுகர்வு தன்மை அதிகரிப்பும்; வருவாய் அதிகாரிகளின் மேம்படுத்தப்பட்ட ஆய்வு மற்றும் வரி செலுத்துவோரின் அதிக இணக்கமும் இதற்கு முக்கிய காரணங்களாக பார்க்கப்படுகிறது.

ஜி.எஸ்.டி., நடைமுறையின்படி, 50,000 ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள பொருட்களுக்கான, மாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்துக்கு, இ - வே பில் அவசியம் என்பது குறிப்பிடத்தக்கது.






      Dinamalar
      Follow us