ADDED : செப் 07, 2025 12:15 AM

கி ரெடிட் கார்டு கிடைக்க வேண்டுமென்றால் வேலை, வியாபாரம் என ஏதாவது ஒருவகையில் வருமானத்துக்கு வழி இருக்க வேண்டும். வேலை இல்லை; மாத சம்பளம் இல்லை. ஆனால் கிரெடிட் கார்டு வேண்டும் என்று விரும்புபவர்களுக்காக 'சூர்யோதய் ஸ்மால் பைனான்ஸ்' வங்கி, ஒரு வாய்ப்பை வழங்கி உள்ளது. இவ்வங்கி, நிரந்தர வைப்புக்கு எதிராக ரூபே செலக்ட், ரூபே பிளாட்டினம் என இரண்டு கிரெடிட் கார்டுகளை அறிமுகப்படுத்தி உள்ளது.
இந்த புதிய கார்டுகள் வாயிலாக மேற்கொள்ளப்படும், அனைத்து பரிவர்த்தனைக்கும் 0.50 சதவீதம் கேஷ்பேக் வழங்கப்படும். மாதத்துக்கு அதிகபட்சமாக 3,000 ரூபாய் வரை கேஷ்பேக் பெறலாம். இந்த கார்டுகளுக்கு, ஆண்டு கட்டணம் அல்லது மறைமுக கட்டணம் எதுவும் செலுத்த தேவையில்லை. முதல்முறை கிரெடிட் கார்டு பயன்படுத்துவோர், இல்லத்தரசிகள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் ஆகியோரை குறிவைத்து துவங்கப்பட்டுள்ளது.