ADDED : ஜூலை 13, 2025 10:17 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இந்திய பங்கு சந்தை கடந்த வாரம் இறங்கு முகத்துடன் முடிந்தது. தொடர்ந்து மூன்றாவது நாளாக இறங்குமுகம் கண்ட நிலையில், வார இறுதி வர்த்தக நிறைவில் மும்பை பங்குச்
சந்தையில் சென்செக்ஸ் 690 புள்ளிகள் குறைந்து, 82,500 புள்ளிகளாக இருந்தது.
தேசிய பங்கு சந்தையில் நிப்டி 205 புள்ளிகள் குறைந்து, 25,150 புள்ளிகளாக இருந்தது. ஐ.டி., ஆட்டோ மற்றும் எரிசக்தி துறை பங்குகள் இறங்குமுகம் கண்டன. சர்வதேச
சந்தையின் கலவையான போக்கு மற்றும் வர்த்தக வரி தொடர்பான நிச்சயமற்ற தன்மை தாக்கம் செலுத்தின. நிதி நிலை முடிவுகளில் முதலீட்டாளர்கள் கவனம் செலுத்தினர்.

