ADDED : ஆக 10, 2025 06:53 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இந்திய பங்குச்சந்தை கடந்த வாரம் இறங்குமுகத்துடன் முடிந்தது. வார இறுதி வர்த்தக நிறைவில் மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ், 765 புள்ளிகள் குறைந்து 79,858 புள்ளியாக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிப்டி, 233 புள்ளிகள் குறைந்து 24,363 புள்ளியாக இருந்தது.
வெளிநாட்டு முதலீடு விலக்கல் மற்றும் வர்த்தக வரி விதிப்பு பாதிப்பு தொடர்பான அச்சம் சந்தையில் தாக்கம் செலுத்தியது. வெளிநாட்டு நிதி கழக முதலீட்டாளர்கள் பங்குகளை விற்பதில் ஆர்வம் காட்டினர். எனினும் உள்நாட்டு நிதிகழகமுதலீட்டாளர்கள் பங்குகளைவாங்குவதில் ஈடுபட்டனர்.