தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பொது/தரை முதல் சுவர் வரை அழகுக்கு புதிய பரிணாமம்!

தரை முதல் சுவர் வரை அழகுக்கு புதிய பரிணாமம்!

தரை முதல் சுவர் வரை அழகுக்கு புதிய பரிணாமம்!


UPDATED : அக் 19, 2026 12:00 AM

ADDED : அக் 18, 2026 04:35 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 19, 2026 12:00 AM ADDED : அக் 18, 2026 04:35 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஒ ரு கட்டடத்தின் அழகையும், தனித்துவத்தையும் வெளிப்படுத்துவதில் தரை மற்றும் மேற்பரப்பு அலங்காரப் பொருட்களுக்கு முக்கிய பங்கு உள்ளது. கட்டடத்தின் வடிவமைப்புக்கு அழகு சேர்ப்பதுடன், அதன் தரத்தையும், தனித்துவத்தையும் வெளிப்படுத்தும் வகையில் பொருட்களைத் தேர்வு செய்வது அவசியம்.

இதை கருத்தில் கொண்டு, தரம், நேர்த்தி மற்றும் நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டு, கோவையில் செயல்பட்டு வரும் எஸ்.எஸ்.மார்பிள் பிரீமியம் மார்பிள்கள், இறக்குமதி செய்யப்பட்ட சிறப்புத் தொகுப்புகள், டிசைனர் டைல்ஸ் மற்றும் பல்வேறு மேற்பரப்பு அலங்காரத் தீர்வுகளை வழங்கி வருகிறது.

உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மார்பிள்கள் மற்றும் மேற்பரப்பு அலங்காரப் பொருட்கள், தனித்துவமான வண்ணங்கள், அமைப்புகள், வடிவங்கள் மற்றும் நேர்த்தியான பூச்சுகளுடன் பல்வேறு வகைகளில் கிடைக்கின்றன. இயற்கை மார்பிள்களின் காலத்தால் அழியாத அழகு முதல் சமகால வடிவமைப்புகளின் நவீன நேர்த்தி வரை, பல்வேறு ரசனைகளுக்கும் கட்டடக்கலைத் தேவைகளுக்கும் ஏற்ற தேர்வுகள் இடம் பெற்றுள்ளன.

ஆடம்பர வீடுகள், தனி வில்லாக்கள், வணிக வளாகங்கள், அலுவலகங்கள் மற்றும் விருந்தோம்பல் சார்ந்த கட்டுமானத் திட்டங்களுக்கு ஏற்ற தரை மற்றும் மேற்பரப்பு அலங்காரப் பொருட்களை இங்கு தேர்வு செய்யலாம்.

பொருட்களின் வெளிப்புற அழகு மட்டுமின்றி, தரம், பூச்சின் நேர்த்தி, வண்ணம், பயன்பாட்டுத் திறன் மற்றும் நீடித்த தன்மை ஆகியவற்றுக்கும் எஸ்.எஸ்.மார்பிள் முக்கியத்துவம் அளிக்கிறது. வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகள் மற்றும் கட்டுமானத் திட்டங்களின் தேவைகளை கருத்தில் கொண்டு, பொருட்கள் கவனமாகப் பரிசீலிக்கப்பட்டு, தரச் சோதனை செய்யப்பட்ட பொருட்களே தேர்வு செய்யப்படுகின்றன.

தரை மற்றும் மேற்பரப்பு அலங்காரப் பொருட்களில் பல்வேறு வண்ணங்கள், வடிவங்கள், அமைப்புகள் மற்றும் பூச்சுகள் இருப்பதால், சரியான தேர்வை மேற்கொள்வது சவாலாக இருக்கலாம். வாடிக்கையாளர்களின் இடவசதி, பயன்பாடு, ரசனை மற்றும் திட்டத் தேவைகளைப் புரிந்து கொண்டு, அதற்கேற்ற பொருட்களைத் தேர்வு செய்ய எஸ்.எஸ்.மார்பிள் அனுபவமிக்க குழுவினர் வழிகாட்டுகின்றனர். வீட்டு உரிமையாளர்கள், கட்டடக் கலைஞர்கள் தங்கள் கற்பனை மற்றும் ரசனைக்கு ஏற்ற தேர்வுகளை நம்பிக்கையுடன் மேற்கொள்ளலாம்.

ஒரு பொருளைத் தேர்வு செய்வதுடன் முடிவடைவதில்லை. வாடிக்கையாளரின் தேவைக்கேற்ப ஆர்டர் ஒருங்கிணைப்பு, பொருட்களைப் பாதுகாப்பாகக் கையாளுதல் மற்றும் கட்டுமானப் பணியிடத்திற்கு முறையக அனுப்பி வைத்தல் போன்ற பணிகளும் ஒருங்கிணைந்து மேற்கொள்ளப்படுகின்றன. எஸ்.எஸ்.,மார்பிளில், ஆடம்பரம் என்பது பார்வைக்கு அழகாகத் தெரிவதில் மட்டுமல்ல; தரம், நீடித்த அழகு, தனித்துவமான வடிவமைப்பு மற்றும் நம்பகமான சேவையிலும் வெளிப்படுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us