நவீன தொழில்நுட்பத்தில் தயாராகும் காவேரி வாட்டர் டேங்குகள்
நவீன தொழில்நுட்பத்தில் தயாராகும் காவேரி வாட்டர் டேங்குகள்
UPDATED : அக் 19, 2026 12:00 AM
ADDED : அக் 18, 2026 04:35 AM

கோ வை, கவுண்டம்பாளையத்தில் நவீன தொழில்நுட்பத்துடன் காவேரி வாட்டர் டேங்குகள் தயாரிக்கப்பட்டு வருவதாக, காவேரி குரூப் ஆப் கம்பெனியின் நிர்வாக இயக்குனர் வினோத் சிங் ரத்தோர் தெரிவித்தார்.
தனது நிறுவனத்தின் தயாரிப்புகள் மற்றும் தரம் குறித்து அவர் கூறியதாவது:
கவுண்டம்பாளையத்தில் அமைந்துள்ள காவேரி நிறுவனம் 50 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறது. கோவையில் எங்கள் நிறுவனத்தை நிறுவிய கல்யாண் சிங் ரத்தோரின் விடாமுயற்சியால், 1972ல் சிமென்ட் பைப்புகளை ஐ.எஸ்.ஓ., தரச்சான்றிதழுடன் உற்பத்தி செய்த முதல் நிறுவனமாக காவேரி விளங்கியது. 2001ல் சிமென்ட் பைப்புகளின் பயன்பாடு குறைந்ததை தொடர்ந்து, காவேரி பிராண்டில் பி.வி.சி., யு.பி.வி.சி., பைப்புகளை அறிமுகம் செய்தோம். தற்போது அரை இன்ச் முதல் 8 இன்ச் வரையிலான பி.வி.சி., பைப்புகள் தயாரிக்கப்படுகின்றன.
2015 முதல் 3 லேயர் வாட்டர் டேங்குகள், 2025 முதல் 5 லேயர் அத்திக்கடல் வாட்டர் டேங்குகள், 2026 முதல் 7 லேயர் ஸ்டார் ஷிப் வாட்டர் டேங்குகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. மேலும், 10 லேயர் ‘மன்டா ரே’ (Manta Ray) வாட்டர் டேங்குகளையும் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளோம்.
முதல் முறையாக 8 வண்ணங்களில் வாட்டர் டேங்குகளை அறிமுகம் செய்துள்ளோம். வாடிக்கையாளர்களின் தேவைக்கு ஏற்ப வண்ணங்களை தேர்வு செய்து தயாரித்து வழங்குவதுடன், 10 ஆண்டுகள் உத்தரவாதமும் வழங்கப்படுகிறது.
வளையும் தன்மை கொண்ட எலெக்ட்ரிக்கல் பைப்புகளுடன், வீட்டு உபயோகத்திற்கு தேவையான பொருட்களையும் தயாரிக்கிறோம்.
மேலும், போர்வெல் கேசிங் பைப், சானிட்டரி வேர்ஸ், ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் கிட்சன் சிங்க், குவார்ட்ஸ் கிட்சன் சிங்க் மற்றும் கட்டுமான நீர் குழாய் போன்றவை நவீன முறையில், சிறந்த தரத்தில் தயாரிக்கப்படுகிறது.
சமூக வளர்ச்சி மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பிலும் காவேரி நிறுவனம் பங்களித்து வருகிறது. அரிமா சங்கத்துடன் இணைந்து இதுவரை 5 லட்சத்துக்கும் மேற்பட்ட செவ்வரளி செடிகளை வழங்கியுள்ளோம். நிறுவன பணியாளர்களுக்கு தமிழ் கலாசாரத்தின் அடிப்படையில் வேஷ்டி, சட்டை சீருடையாக வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மேலும் விபரங்களுக்கு: 97912 54738, 63826 74409.
