'மறுசுழற்சி மூலப்பொருளுக்கு 18 சதவிகிதம் ஜி.எஸ்.டி.,யை ரத்து செய்க'
'மறுசுழற்சி மூலப்பொருளுக்கு 18 சதவிகிதம் ஜி.எஸ்.டி.,யை ரத்து செய்க'
ADDED : அக் 10, 2025 11:40 PM

புதுடில்லி:மறுசுழற்சிக்கான பிளாஸ்டிக் பாட்டில் உள்ளிட்ட மூலப்பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி.,யை ரத்து செய்ய மறுசுழற்சி துறையினர் அரசை வலியுறுத்தியுள்ளனர்.
டில்லியில் அத்துறையினர் கூறியதாவது:
சுற்றுச்சூழல் பாதுகாப்பில், ஐரோப்பிய யூனியனை உத்வேகமாக கொண்டு நம்நாடும் கொள்கைகளை வகுக்கிறது. அதில், நாட்டின் தனித்தன்மையான உண்மைகளில் ஒன்றான அமைப்புசாரா பொருளாதாரத்தின் முக்கிய பங்கையும் உணர்ந்து, அரசின் கொள்கைகளில் சேர்க்க வேண்டும்.
ஏ.ஐ., ரோபோட்டிக் உள்ளிட்ட டிஜிட்டல் தொழில்நுட்பங்களுடன் மறுசுழற்சி துறையின் முதுகெலும்பாக உள்ள அமைப்புசாரா தொழி லுக்கும் முக்கியத்துவம் வழங்கப்பட வேண் டும். பிளாஸ்டிக் பாட்டில் உள்ளிட்ட மறுசுழற்சிக்கான மூலப்பொருட்களுக்கு 18 சதவீதமாக உள்ள ஜி.எஸ்.டி., ரத்து செய்ய வேண்டும். இதன் வாயிலாக, நியாயமான, நீடித்த, நிலைத்தன்மையான சுற்றுச்சூழலை உறுதிப்படுத்தலாம்.
மத்திய அரசு தரவுகளின்படி, நாட்டின் பொருளாதாரம் 4.30 லட்சம் டாலர் என்ற நிலையில், இதுவரை பதிவாகாத, அமைப்புசாரா மறுசுழற்சி துறையின் பங்கையும் சேர்த்தால் 5 லட்சம் கோடி டாலரை தாண்டும் என்பதை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.